திருச்சி மாவட்டம் காட்டூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களுடன் இருந்த காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 6 பேர் மது அருந்தியதை வீடியோ எடுத்த இந்திய மாணவர் சங்கத்தினர், அவர்களில் 4 பேர் காவலர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து மது அருந்திய பிரபு, மகேஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அங்கிருந்த மணிகண்டம் காவல்நிலைய காவலர் இளையராஜா மது அருந்தவில்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் இளையராஜா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.