நாமக்கல்லில் சங்க விதிமுறைகளை மீறி மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்த கொக்கராயன் பேட்டை மீனவர் சங்கத்தினரிடம் பள்ளிபாளையம் மீனவர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.