திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் பைக்கில் சென்றவர்களை காட்டு யானை விரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மூணாறில் இருந்து உடுமலை நோக்கி இரு சக்கர வாகனங்களில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.