நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 3 குட்டிகளுடன் புலி சாலையில் உலா வந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தொட்டபெட்டா அருகே உள்ள சாலையில், புலி குட்டிகளுடன் உலா வந்த நிலையில், இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணி செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.