சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி சுவாதி பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள, பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். அதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.