நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஹோட்டல் பணியாளர்கள் இருவர் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.திண்டுக்கல்லை சேர்ந்த சிங்காரி என்பவர் வேளாங்கண்ணியில் நடத்தி வந்த ஹோட்டலில் திண்டுக்கலை சேர்ந்த வெற்றிச்செல்வன் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துபாண்டி ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.சம்பவத்தன்று இரவு இருவரும் கடையைவிட்டு வெளியில் வந்து பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் முத்துப்பாண்டி, வெற்றிச்செல்வனை தள்ளிவிட்டதில் அவர் சுவற்றில் மோதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி முத்துப்பாண்டியை கைது செய்தனர்.