தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே நடைபெற்ற கோவில் கொடைவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாட சாமி கோவிலில் ஆடி மாத கொடைவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, தாமிரபரணியில் இருந்து தீர்த்தவாரியும், காலை முதல் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், மதியம் சிறப்பு கொடையும் நடைபெற்றன. இரவு நடைபெற்ற பூஜையின்போது பல ஆண்களும், பெண்களும் சாமியாடினர். ஏராளமான பக்தர்கள் கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து சாமியை தரிசனம் செய்தனர்.