சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மகளுடன் சாமி தரிசனம் செய்த பாடகர் வேல்முருகன், அம்மனைப் பற்றி மனமுருகி பாடல் பாடினார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவர், கொடி மரத்தை சுற்றி வந்து விநாயகர், முருகர், தியாகராஜர், ஆதிபுரீஸ்வரர், வட்டப்பாறை அம்மன் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடிவுடையம்மன் சன்னிதியில் அமர்ந்து வழிபட்டார். தொடர்ந்து அம்மனை பற்றி வேல்முருகன் பாடல் பாடவே, அதனை கேட்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.