வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியூர் பகுதியில் சென்னை - பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தில் இருவரும் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர். சிதறி கிடந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் இருவரும் கணவன் மனைவியா இல்லை வேறு ஏதேனும் தொடர்பு உள்ளவர்களா என பல கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்தவர்கள் லத்தேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோகிலா என்பது தெரியவந்துள்ளது. மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இன்ஸ்டாவில் மாற்று சமுகத்தை சேர்ந்த கோகிலாவுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.