வேலூர் மத்திய சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டிஐஜி, ஜெயிலர் மற்றும் கைதிகளிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறைக் கண்காணிப்பாளர் ரகுமான் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது குறித்து, வேலூர் மத்திய சிறை வார்டன்கள், காவல்துறையினர், மற்றும் அங்குள்ள சக கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.