கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியில் ஜொலிக்கிறது. நடுத்திட்டில் இருந்து தியான மண்டபம் செல்லும் வழியில் 400 அடி நீளம் மற்றும் 60 அடி அகலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 16 ஆயிரம் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தியான மண்டபம் வாசலில் 55 அடி உயரம் மற்றும் 30 அடி அகலத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் டவர் அமைக்கப்பட்டுள்ளது.