தென் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்க கூடிய வேளாங்கண்ணியில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தமிழ் , ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். செப்டம்பர் 8 ம் தேதி மாதா பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு அன்று மாலை கொடியிறக்கப்பட்டு ஆண்டு விழா நிறைவுபெறும். இந்நிலையில், கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் குவிந்து வருகின்றனர்.