சென்னை வேளச்சேரி - பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்கள் இடையிலான இணைப்பு சாலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இணைப்பு சாலையில் கூடுதலாக மின்விளக்குகள், தேவைப்படும் இடத்தில் புதிய சாலை, இருக்கைகள், நீர்த்தேக்க குளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. .