சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு அரசு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழிலகம் வளாகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு அரசு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.