திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் துருப்பிடித்து காவல் நிலையங்களில் வீணாகி வருவதை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.திருட்டு மற்றும் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி செய்யாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கார், ஆட்டோ, வேன், மினி லாரி என உரிமை கோரப்படாத ஆயிரக்கணக்கான வாகனங்கள் துருப்பிடித்து எலும்புக் கூடாகி குப்பைகளை போல குவிந்து கிடக்கின்றன.இதனால் அங்கு செடிகள் மண்டி விஷ ஜந்துகளின் வாழ்விடமாக மாறி, அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.