ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.