காலாண்டு விடுமுறை முடிந்து கேரளாவில் இருந்து அதிகளவில் வாகனங்கள் வருவதால் தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள முந்தல் சோதனை சாவடியில் சுகாதார பணியாளர்கள் நிபா வைரஸ் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.