கன்னட நடிகர் ராஜ்குமார் காட்டில் இருந்த போது அவரை காப்பாற்ற, வீரப்பனை சந்திக்க தானும் வருவதாக நடிகர் ரஜினி தன்னிடம் கூறியதாக நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீரப்பனை சந்திக்க ரஜினி தயாராக இருந்ததாகவும் ஆனால் பிரச்சனையாகிவிடும் என்பதால், தான் அங்கு சென்று அழைப்புவிடுக்குறேன் என கூறிவிட்டு டேக்கா கொடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.