ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டணி தர்மத்திற்காக தனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை மூடியது போன்று, விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடியதாகவும் தெரிவித்துள்ளார்.