காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, விசிக கவுன்சிலர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். 2வது வார்டு கவுன்சிலர் தியாகராஜன், தனது வார்டுக்கு உட்பட செங்காடு பகுதியில் தனக்கு தெரியாமல் 20 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அது குறித்து கேட்ட போது திமுக ஒன்றிய சேர்மன் கருணாநிதி துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : ஜீவா ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை அடைப்பு