வசந்த் & கோவின் 140வது கிளையை, அந்நிறுவனத்தின் பங்குதாரர் வினோத் வசந்தகுமார் விருதுநகரில் திறந்து வைத்தார். விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே திறக்கப்பட்ட புதிய கிளையின் முதல் விற்பனையையும் வினோத் வசந்தகுமார் தொடங்கி வைத்தார். திறப்பு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.