சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை, மக்கள் பயன்பாட்டிற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அமைச்சர் கௌரவித்தார்.