ஆவணி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு, கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு தூப தீபங்கள் காட்டி, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வராகி அம்மனை மனம் உருகி வழிபட்டு சென்றனர்.