கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் நதியில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.