குமரி மாவட்ட ஆட்சியர், தங்களை தரக்குறைவாக நடத்தியதாக கூறி, கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஆட்சியர் அழகுமீனா அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து கடந்த 24ஆம் தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆட்சியர் அழகுமீனா ஒருமையில் திட்டியதாகவும், கைப்பேசியை தூக்கி எறிந்து, உருவ கேலி செய்ததாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம்சாட்டினர். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவரது அறை முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம், இனிமேல் இதுபோல் நடக்காது என ஆட்சியர் மன்னிப்பு கோரியதாக தெரிகிறது.