நாமக்கல் மாவட்டம் பெரிய கவுண்டம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி, தொடர்ந்து 4-வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நருவலூர் அக்ரஹாரம் கிராம விஏஓ இராமனை, திருமுருகன் என்பவர் தாக்கியதாக, போலீசில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.