சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பட்டா வாங்கி தருவதாக கூறி G-pay மூலம் மூவாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். ராஜேஸ்வரி என்பவரிடம் கீழநெட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ராக்கு என்பவர் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது.