வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். வேப்பூரை சேர்ந்த நீஜாமுதீன் பட்டா மாறுதலுக்காக விஏஓ கோபிநாத்தை அணுகியபோது அவர் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிஜாமுதீன், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் அளித்த புகாரில், அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் விஏஓவிடம் நிஜாமுதீன் பணத்தை வழங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஏஓ கோபிநாத்தை கையும் களவுமாக கைது செய்தனர்.