வாரிசு சான்றிதழ் வழங்க 45 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஈரோடு மாவட்டம் ஆசனூர் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். ஒசட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் ருத்ர செல்வத்திடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, ருத்ர செல்வம், 45 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிவராஜ் புகார் அளித்தார்.