கல்விக்கு மத்திய அரசு கொடுத்த கோடிக்கணக்கான நிதிக்கு உரிய ரசீதை கேட்டால் கொடுக்காத தமிழக அரசு, மத்திய அரசு நிதியை கொடுக்காமல் வஞ்சிப்பதாக தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசிடம் கேள்வி எழுப்பினால், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்ற பல்லவியை பாடுவதாக கூறினார்.