தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பெங்களூருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வேன், பேருந்து நிறுத்தம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். சபரிமலையில் தரிசனத்தை முடித்து கொண்டு திருச்செந்தூர் நோக்கி சென்றபோது வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தம் மீது மோதியதில் அது இடிந்து தரைமட்டமானது.