கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் கல்லூரி மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்ல வந்த பேருந்து ஓட்டுநரை வேன் ஓட்டுநர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிரேஸ் தனியார் நர்ஸிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்காக கல்லூரி நிர்வாகம் கேரள பதிவெண் கொண்ட தனியார் பேருந்தை ஏற்பாடு செய்தது. மாணவிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரான பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை கல்லூரியின் வேன் ஓட்டுநர்கள் சரமாரியாக தாக்கினர். இந்நிலையில், ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்று விபத்துக்குள்ளானது கேரள பதிவெண் கொண்ட பேருந்து என்பதால், தமிழ்நாட்டில் அனுமதியின்றி இயங்கும் பேருந்துகளால் விபத்து ஏற்படுவதாக கூறி வேன் ஓட்டுநர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.