கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் பைக்கில் பயணம் செய்த 3 இளைஞர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வேன் மோதி விபத்து ஏற்பட்டது.