திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியிலிருந்து ஐவர்மலை செல்லும் சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஐவர்மலை செல்லும் சாலையில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயத்துடன் பெண்கள் உயிர் தப்பினர். மண் ஏற்றி வேகமாக சென்ற லாரியால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.