காஞ்சிபுரம் அருகே சுப நிகழ்ச்சிகளுக்கு சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் ஓரிக்கை புறவழி சாலையில் வேகமாக சென்ற கார், எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.