பழனி தைப்பூசத் திருவிழாவில் முருக பெருமானை திருமணம் செய்த வள்ளிக்கு, குறவர் மக்கள் தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசைகளை கொண்டு சென்றனர். குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கு அவரது பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் இந்த தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.தேன், தினை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவற்றை சீர்வரிசையில் வைத்தும், அலகு குத்தியும், பாரம்பரிய ஆட்டம் ஆடியும், பாடியும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த குறவர் மக்கள் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களை எடுத்து சென்றனர்.