ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தான்தோன்றியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தை முன்னாள் அமைச்சரும் தவெக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். உள்ளூர் சிறுமியர், இளம்பெண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடிய இந்த வள்ளி கும்மி ஆட்டத்தை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர்.