தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் உபரிநீர் கொட்டும் காட்சியை கவிஞர் வைரமுத்து கண்டு ரசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தமது சொந்த கிராமமான வடுகப்பட்டிக்கு வந்த வைரமுத்து, சோத்துப்பாறை அணையை காண சென்றார். அணையில் இருந்து கொட்டும் நீரின் அழகை கண்டு ரசித்த அவர், அருகில் உள்ள மாந்தோப்பில் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடியபடி இயற்கையின் ஓசைகளை கேட்டு மெய்மறந்து ரசித்தார்.