திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4ம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் பீதாம்பரப்பட்டு அணிந்து, கல் இழைத்த அரை கொண்டை சாற்றி தங்க பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவம் கோலாகலமாக நடந்து வரும் நிலையில் 4 ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் வைர அபய ஹஸ்தம், மார்பில் பங்குனி உத்திரப்பதக்கம், அடுக்குப் பதக்கங்கள் உள்ளிட்ட திருபாவரணங்கள் அணிந்து தங்க பல்லாக்கில் எழுந்தருளி அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் ரங்கா கோசத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.