திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் 7ம் நாளில் தங்க நிற பட்டு, பல்வேறு ஆபாரணங்களை அணிந்தபடி பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கிய நிலையில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு 10-ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.