ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பெரிய கோவிலில் யானை, மயில், காமதேனு, மூஷிக, கேடக வாகனத்தில் வீதியுலா வந்த பஞ்ச மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ஆவது நாளான நேற்று விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகப் பெருமான் மயில் வாகனத்திலும், ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும், சினேகவல்லி அம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் கேடக வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.