காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மந்திர புஷ்பம் பாடுவதில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் உற்சவத்தில் ஹம்ஸ வாகனத்தின் மீது வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில்,மண்டகபடியில் இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.