முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொது வெளியில் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் குறை கூறி உள்ளார், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செங்கோட்டையனுக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். செங்கோட்டையனுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பொதுச்செயலாளரை தான் சந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.