மதுரை வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் திறந்து விடப்பட்ட தண்ணீரை விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மலர்தூவி வரவேற்றனர். கிருதுமால் பாசனம் பெரும் 46 கண்மாய்களும் நிறைந்து கடைசியாக சுமார் 60 கிலோ மீட்டர் தாண்டி வீரசோழன் கண்மாய்க்கு வருகை தந்த தண்ணீரால், 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.