சுதந்திர தினத்தையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அணையில் உள்ள 7 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் மூவர்ண கொடியின் வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதைக் கண்டு பரவசமடைந்த சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.