நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கால் நீலகிரி மாவட்டம் உதகையில் பொதுமக்கள் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதகையின் முகப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சிமெண்ட் தளங்களை அமைத்து மழைநீர் வடிகால் பாதை அமைப்பட்டுள்ள நிலையில், வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழிகள், சீரமைக்கப்படாமலும் மூடாமலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறும் வாகன ஓட்டிகள், ஆமை வேக பணிகளால் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாக வேதனை தெரிவித்தனர்.