அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக. புதுக்கோட்டை மாவட்டத்தில் நண்டு மற்றும் இறால் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை 150க்கும் மேற்பட்ட இறால் மற்றும் நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. தற்போதைய விலை நிர்ணயப்படி ஒரு கிலோ இறால் மற்றும் நண்டை, கிலோவுக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பால் விலை சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ இறால் மற்றும் நண்டு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கொள்முதல் விலை குறைந்துள்ளதால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.