அமைச்சர்கள் வருகையையொட்டி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர அவசரமாக தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது, முன்னால் பினாயில் தெளித்த படி ஊழியர்கள் சென்ற காட்சி வெளியாகியுள்ளது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெக்ஸ் ஸ்கேன் கருவியை மக்களின் பயன்பாட்டிற்காக அளிக்கும் நிகழ்விற்காக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். இதனையொட்டி, மருத்துவமனை உள்ளேயும், வெளியேயும் தீவிர தூய்மைப் பணி நடந்தது. மண்கூட இருக்கக் கூடாது என்பது போல் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை துடைப்பத்தால் கூட்டியபடியே இருந்ததுடன், அமைச்சர்கள் எதிரில் மருத்துவப் பயனாளிகள் யாரும் வந்துவிடக் கூடாது என அவர்களை ஓரமாக நிறுத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது.இதையும் பாருங்கள் - திடீர் விசிட் அடித்த அமைச்சர்கள், ஊழியர்கள் செய்த செயலால் அதிர்ச்சி | MinisterVisit | Madurai