இராணுவ வீரர்களுக்கு இணையாக துணை ராணுவப் படை வீரர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டுமென, முன்னாள் துணை ராணுவ படை வீரர்கள் கூட்டமைப்பு நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேலை வாய்ப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், நல வாரியம் அமைத்தல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே துணை ராணுவப் படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.