திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழாவில் தேரானது நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் பால் குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.